உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரை தன்னால் மட்டுமே தடுக்க முடியும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடு யுத்தத்தில் உக்கிரைனுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை செய்து ஆதரவு கொடுத்து வருகிறது. மேலும் போர் உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக வீடியோ மூலம் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த போரை தற்போதைய அமெரிக்க அரசு சரியாக கையாளவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார். தான் அதிபராக இருந்திருந்தால் போர் பூண்டிருக்காது என தெரிவித்துள்ளார். போர் இருக்கும் சூழ்நிலை தெரிந்து இருந்தால் 24 மணி நேரத்தில் சண்டை ஏற்படாமல் தீர்த்து வைத்திருப்பேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.