இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் இங்குள்ள பாரம்பரிய உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் கொரிய பெண் தனது குடும்பத்துடன் ஆளு பூரியை சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது நிலையில், இந்தியர் ஒருவர் தனது கொரிய குடும்பத்துக்கு ஆளு பூரியை பரிமாறுகின்றார்.

இதனை அந்தப் பெண் ருசித்து சாப்பிடுகின்றனர். அதன் பின் சிறிதளவு சாதம் சாப்பிடுகின்றனர். இந்த உணவு நன்றாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோ வைரலாகி 2.5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதற்கு பயனர்கள் பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர் கொரியர்கள் அரிசி மற்றும் கிம்ச்சி இல்லாமல் வாழ முடியாது என்று பதிவிட்டுள்ளார்.