தை திருநாளாம் பொங்கல் தமிழ்நாட்டில் மிகவும் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் 2025ம் ஆண்டிற்கான அரிசி அட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்றும், அதோடு இலவச வேட்டி, சேலைகள் பொங்கல் பரிசு தொகப்புடன் சேர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி கடந்த 9ம் தேதி அன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகளில் 2 கோடியை 20 லட்சத்தி 94 ஆயிரத்து 585 அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்றது.

இதற்காக சுமார் 50,000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 11ம் தேதி வரை ஒரு கோடியே 47,07,584 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு தொகுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் 67% பணிகள் நிறைவு பெற்றது. மீதமுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 13ம் தேதி அன்று பொங்கல் தொகுப்பு விநியோகம் முடிவு பெற்ற நிலையில் இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்களுக்கு உணவுத்துறை அமைச்சர் நல்ல செய்தியை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, பொங்கல் தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் முடிந்ததும் பெறுவதற்கு முதலமைச்சரிடம் அனுமதி பெற்று நாட்கள் நீடிக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.