சென்னை மாவட்டம் தண்டையார்பேட்டையில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜிம்மிற்க்கு வரும் பெண்ணிடம் பேசி பழகியுள்ளார். பின்பு அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி நடித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து 45 பவுன் தங்க நகைகள், 10 லட்சம் ரொக்க பணம் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை பறித்து ஏமாற்றியுள்ளார்.

இதேபோன்று பல பெண்களிடம் அவர் ஆசை வார்த்தைகளை பேசி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்களில் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஜார்ஜை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.