அஹமதாபாத்,  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடர் லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 38 ரன்களில் வீழ்த்தியது. ஆனால், போட்டியின் turning point எனக் கூறப்படும் ரன் அவுட் சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதாவது 13வது ஓவரில், ஜோஸ் பட்லர் ஷாட் விளாசியபோது, சுப்மன் கில் ரன் எடுக்க ஓடினார். ஹர்ஷல் பட்டேல் பந்தை விரைவில் பிடித்து டைரக்ட் ஹிட் மூலம் ஸ்டம்ப்ஸ் அடித்தார். சுப்மன் கில் க்ரீஸை எட்டவில்லையெனக் கருதி, மூன்றாம் அம்பயர் நீண்ட காட்சிப்பதிவுகளுக்குப் பின் அவுட் எனத் தீர்ப்பு அளித்தார். இது GT கேப்டனான சுப்மனை கடும் கோபமடைய செய்தது. அவர் பெவிலியனுக்குச் செல்லும் போதும், நான்காவது அம்பையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவரது ஆட்டம் அதுவரை அபாரமாக இருந்தது. 38 பந்துகளில் 10 பவுண்டரிகளும் 2 சிக்ஸுகளும் அடித்து 76 ரன்கள் குவித்தார். மொத்தமாக GT அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 224  ரன்களை எடுத்தது.

 

தொடர்ந்து விளையாடிய  SRH அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபிஷேக் ஷர்மா  அதிகபட்சமாக 74 ரன்கள்எடுத்திருந்தார் .

இந்த வெற்றியுடன் GT அணி தொடரில் தங்களின் முன்னணியை உறுதியாக்கியது. மேலும் கில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.