மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் வரை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு ஊழியர் தன் உடலில் உள்ள எந்த பாகத்தையாவது தானம் செய்தால் அது மிகப்பெரிய அறுவை சிகிச்சை.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதிலிருந்து உடல் நலம் பரிபூரணமாக குணமாகி மீண்டு வருவதற்கு அதிக நாட்கள் தேவைப்படும். இதை கருத்தில் கொண்டு 42 நாட்கள் சிறப்பு விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த புதிய விடுமுறை ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இந்த விடுமுறை ஒரு குறிப்பிட்ட பிரிவு அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.