ஆசிரியர்களுக்கு சேவை செய்து கல்வி கற்றேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பேசிய ஆளுநர், இந்தியா என்பதற்கு பதில் பாரத் என குறிப்பிட்டு பேசினார். 2047க்குள் உலக நாடுகளை வழி நடத்தும் இடத்திற்கு பாரத் முன்னேறும் என்ற அவர், எனது குருவான ஆசிரியர் வீட்டில் தண்ணீர் இறைத்தல் உள்ளிட்ட சேவைகளை செய்து கல்வி கற்றேன்.

தினமும் 8 கிலோமீட்டர் நடந்து சென்று கல்வி கற்றேன். மாணவரை மதிப்பெண் வாங்க வைப்பது மட்டும் ஆசிரியரின் கடமை அல்ல நல்வழிப்படுத்துவதும் ஆசிரியரின் கடமை. ஆசிரியர்களுக்கான இடத்தை எந்த தொழில் நுட்பமும் பூர்த்தி செய்ய இயலாது. மனிதர்களின் இடத்தை இயந்திரங்களால் எப்போதும் நிரப்ப முடியாது எனவும் ஆளுநர் ஆர்.என் ரவி பேசினார்.