
பீகாரில் பெட்டியா என்ற பகுதியில் அரசு நர்சிங் GNM என்ற டிப்ளமோ படிப்புக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதில் பிரின்சிபலாக இருக்கும் ஜெய்ஸ்வால் அலுவலகத்தில் இருந்து கொண்டே மது குடிப்பது மற்றும் மசாஜ் செய்து கொண்டு இருந்துள்ளார். இதனை அங்கு பயின்று வரும் மாணவர்கள் போனில் பதிவு செய்து, அம்மாநில முதலமைச்சருக்கும், சுகாதார அமைச்சகத்துக்கும் புகார் அளித்தனர்.
இதற்கு முன்னரும் அவர் மீது புகார் அளித்திருந்தும் எந்த ஒரு பயனும் இல்லை என்று மாணவர்கள் கூறினர். இதுகுறித்து பயிற்சி மையத்தின் பிரின்சிபல் கூறியதாவது, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பொருட்டு ஜோடிக்கப்பட்ட புகைப்படங்கள் இவை என்று தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.