தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய மீட்டர்களை மாற்றி ஸ்மார்ட் மீட்டர்கள் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர் இணைப்புக்காக முதல் கட்டமாக தமிழக அரசு 1. 26 லட்சம் மீட்டர்களை பொருத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர்களில் தானாகவே குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட அளவு மின்சார பயன்பாட்டை தெளிவாக காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆள் இல்லாமல் இயங்கும் மீட்டர்களை தமிழகம் முழுவதும் பொருத்துமாறு மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி ஒதுக்கி உள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் மீட்டர்கான டெண்டர் சென்ற ஆண்டு தமிழகத்தில் நடைபெற்றது. ஆனால் இதுவரை டெண்டர் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட் மீட்டர் இணைப்பு அதிகம் செயல்படுத்திய மாநிலங்களில் 12 வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம் பீஹார், அசாம்,ஹரியானா போன்ற மாநிலங்களில் தீவிரமாக செயல்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது.