தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 2-ம் நிலை காவலர்கள் மற்றும் காவல் சார்பாக ஆய்வாளர் பதவிகள் பதவிகளுக்கு போட்டி தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதனை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இந்த பணிக்கு காத்திருப்பவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 3665 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 283 இரண்டாம் நிலை காவலர்கள், 180 சிறை காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளது. இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 18,200 முதல் 67,100 வரை வழங்கப்பட உள்ளது. தேர்வர்கள் நாளை முதல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு வரும் நவம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.