பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் தனியார் அல்லாத பண்ணை, சிறு, குறு தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு பிணை இல்லாமல் 10 லட்ச ரூபாய் வரை கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவு செய்ததால் தற்போது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ. 2.32 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பெருமளவு உதவியுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கிறது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-ம் ஆண்டு விழாவில் பேசியுள்ளார். மேலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 2023 மார்ச் மாத நிலவரப்படி 40.82 கோடி கடன் கணக்குகளில் 23.2 லட்சம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.