
மத்திய அரசின் ஓய்வூதிய திட்ட அறிவிப்பின்படி கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு அரசு பணியில் பணிபுரிபவர்களுக்கு உறுதியான ஓய்வூதியம் இல்லை என அறிவித்திருந்தது. மேலும் அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 50% ஊதியத்திற்கு நிகரான ஓய்வூதியம் பெறுவதையும் என். பி.எஸ் மாற்றியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுபி..எஸ் திட்டத்திற்கு மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது. அதன்படி மத்திய அரசில் பணிபுரியும் பணியாளர்கள் குறைந்து மற்றும் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
அவ்வாறு 25 ஆண்டுகளைக் கடந்தவர்கள் தங்களது ஊதியத்தில் இருந்து 50% ஓய்வூதியமாக பெறுவர். நாட்டின் பணவீக்க போக்குகளுக்கு ஏற்ப அவ்வபோது ஓய்வூதிய உயர்வு குறித்தும் இந்த திட்டம் உறுதி அளித்தது. இதனை அடுத்து 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களில் இல்லை எனினும் மத்திய அரசு பணியில் 10 ஆண்டு காலமாவது நிறைவு செய்த பணியாளர்களுக்கு குறைந்த பட்சம் 10,000ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்படும் என்பதையும் யு.பி.எஸ் உறுதி செய்தது.
இது குறித்த ஒப்புதல் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு பணியாளர்கள் யு.பி.எஸ் திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த ஆண்டு அமலுக்கு வருகிறது. யு.பி.எஸ் திட்டத்தில் இணைந்திருப்போர் என் பி எஸ் திட்டத்தில் மீண்டும் இணைய முடியாது. இந்த யு.பி.எஸ் திட்டத்தை மாநில அரசுகளும் அமல்படுத்தலாம் என மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.