
சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாடாக சென்று அந்த நாட்டில் உள்ள வித்தியாசமான செயல்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிடுவது சமீப காலங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதுபோன்று ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இன்ஸ்டா பிரபலமான ஜோஷி இதேபோன்று ஒவ்வொரு நாடுகளாக சென்று வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் சீனாவில் சுற்றுலா செல்ல சென்ற அவர் ஓட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். அங்கு உணவு ஆர்டர் செய்துள்ளார்.
அந்த ஹோட்டல் நிறுவனம் அவரது அறைக்கு உணவை அனுப்பி வைத்துள்ளதாக தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளனர். கதவைத் திறந்த அவர் மிகவும் ஆச்சரியத்துடன் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். வீடியோவில் ஜோஷி கதவை திறந்ததும் சிறிய வடிவிலான குளிர்சாதன பெட்டி போன்ற ஒரு ரோபோ உணவு பொட்டலத்தை டெலிவரிக்காக கொண்டு வந்தது. இதனை வீடியோவாக பதிவு செய்த ஜோஷி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமீபத்தில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.
View this post on Instagram