
கூகுள் பே மூலம் தங்க நகைக் கடன் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் கூகுள் பே கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தம், வாடிக்கையாளர்களுக்கு தங்க நகைகளை அடமானம் வைத்து குறைந்த வட்டியில் கடன் பெற உதவுகிறது. இதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக தங்க நகைக் கடன்களைப் பெற முடியும்.
இந்தியாவில் தங்கம் முக்கிய முதலீட்டுச் சுரங்கமாக பார்க்கப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்தாலும், மக்கள் தொடர்ந்து அதைப் வாங்கி முதலீடு செய்வதை நிறுத்தவில்லை. இதனால் தங்கத்தின் நிலையான எதிர்பார்ப்பு இந்தியாவில் உள்ளது. மேலும் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மையால் வாடிக்கையாளர்கள் தங்கள் நகைகளை பாதுகாப்பாக வைத்து தேவைக்கேற்ற கடன்களைப் பெற முடிகிறது.
கூகுள் பே மற்றும் முத்தூட் ஃபைனான்ஸ் இடையே ஏற்பட்டுள்ள இந்த கூட்டாண்மை, வாடிக்கையாளர்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் கடன் வசதி வழங்கும். இதை பயன்படுத்தி மக்கள் தங்கள் அவசர தேவைகளை பூர்த்தி செய்து கடன்களை எளிதில் திருப்பிச் செலுத்த முடியும். இந்த ஒப்பந்தம், இந்தியாவின் பெரும்பாலான மக்களுக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கும், மேலும் தங்க நகைக் கடன் பெறும் முறை எளிமையாகும்.