திருச்சி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்த பாஜக மாநில துணை தலைவர் ராம ஸ்ரீனிவாசன், கடும் எதிர்ப்பையடுத்து மதுரையில் களம் காண்கிறார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று அவர் தனது எக்ஸ் தள பதிவில் மோடியுடன் தான் இருக்கும் புகை படத்தை வைத்து #Go Back Modi என பதிவிட்டிருந்தார்.

மேலும் அதன் அருகில் நெருப்பு குறியீட்டையும் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட பாஜக நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை தொடர்புகொண்டு தவறை சுட்டிக்காட்டியவுடன் one nation one thought என அதனை மாற்றியுள்ளார்.