குஜராத் மாநிலத்தில் மெட்ரோ கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் கிரேனை பயன்படுத்தி ஒரு பொருளை தூக்கியுள்ளனர். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அந்த கிரேன் அருகில் உள்ள கட்டிடத்தின் மீது விழுந்தது. உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவற்றை நீக்கி உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக கிரேன் விழுந்த அந்த கட்டிடத்தில் ஆள் யாரும் இல்லை. அது ஏற்கனவே விற்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.