நேற்று தொடர்ந்து ஹமாஸ் தீவிரவாத அமைப்பு ராக்கெட் களை இஸ்ரேல் மீது ஏவியதன் காரணமாக, ராக்கெட் தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்றதால் இஸ்ரேலிய மக்களுக்கு  அருகில் உள்ள பதுங்கு குழிகளுக்குள் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக இப்படி வழங்கப்பட்ட அறிவுரையை அங்குள்ள இந்திய மக்களும் பின்பற்றும் படி இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது.

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம்,  இஸ்ரேல் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னவோ அதை பின்பற்றுங்கள்.  பத்திரமாக நீங்கள் பதுங்கு குழிக்குள்ளே பதுங்கி இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து தற்போது தாக்குதல் ஓரளவுக்கு தடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்து இருக்கிறது.

பதுங்கு குழிகளில் தங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்திய மக்கள் தங்களது இல்லங்களுக்கு செல்லலாம் எனவும்,  ஆனால் இல்லத்தை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும்,  இல்லங்களை பூட்டி விட்டு உள்ளேயே இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் ஹமாஸ் தீவிரவாதிகள் ஏதேனும் பதுங்கி இருந்தால்,அவர்கள் குடியிருப்பில் தாக்குதல் நடத்தலாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. ஆகவே இஸ்ரேலிய மக்களும் தங்களுடைய வீடுகளிலே தங்கி இருக்கும் படியும்,  தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவைச் சேர்ந்த யாரும்  இஸ்ரேலிலே காயமடைந்தவர்களாகவோ அல்லது வேறு வகைகளிலே பாதிக்கப்பட்டவர்களாகவோ இல்லை என தகவல் தெரிவிக்கின்றன. அதே போல இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அக்டோபர் 14ஆம் தேதி வரை இந்த சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.