திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  நம்ம ஒன்றிய அரசு ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் இருந்து கூலிப்   எல்லாம் தயார் பண்ணி,  எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனுப்பி இருக்காங்க. மக்களுக்கு பாதிப்பு வரக் கூடிய குட்கா போன்ற பொருட்கள் தயார் பண்ணி அந்த மாநிலங்களில் இருந்து வருது… அதைவிட மிக மோசமானது ஆன்லைன் ரம்மி. அதை தடுப்பதற்கு அரசு மசோதா கொண்டு வருது.  முதலில் அமைச்சரவை கூட்டம் முடிவெடுத்து, இதை தடை செய்யனும்னு சொல்லி கவர்னருக்கு அனுப்புது. கவர்னர் ஒப்புதல் தந்து இருக்காங்க.

அதுக்கப்புறம் அதே மசோதா சட்டமன்றத்தில் எந்த மாற்றமும் இல்லாமல்…. அப்படியே திரும்ப அனுப்புறோம்…  கிடப்பில் போட்டுறுதாங்க…. உங்களுக்கு தெரியும்….  நீங்க தான் பத்திரிக்கையிலும்,  ஊடகங்களிலும் சொன்னீங்க….  ஆன்லைன் ரம்மி நடத்துகின்ற முதலாளிகள் ஆளுநரை சந்தித்து சென்றார்கள்…  நீங்கதான் சொன்னீங்க….  நாங்க யாரும்  சொல்லல…. நான் பாக்கவே  இல்லை….

அப்போ பார்த்ததுக்கு அப்புறம் அந்த மசோதாவுக்கு அனுமதி தரல. திரும்பி அனுப்பினாங்க…  திருப்பியும் ரீ ப்ரெசென்ட் பண்ணி அனுப்புங்க…   கஞ்சாவை விட கொடுமையானது ஆன்லைன் ரம்மி….  கஞ்சா  எவ்வளவு கொடுமையோ,  அதே போல தான் ஆன்லைன் ரம்மி… இப்போ இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு,  இப்போது கஞ்சா,  போதை வஸ்துகள் 60% கட்டுப்படுத்தப்பட்டிருக்கு.

இன்னும் 40 சதவீதத்துக்கு மேல இருக்குதுன்னு என்கிட்ட சில அதிகாரிகள் சொன்னாங்க….  அதை வெளிமாநிலங்கள் நம்ம கூட ஒத்துழைக்க மாட்டேங்குறாங்க… ஐயா பாரத பிரதமர் அவர்கள் ஒரு சட்டம் போட்டது நிறுத்திட்டா….  ஒரு பிரச்சனையும் இல்லை… நான்  கூடுவாஞ்சேரியில் வைத்து ஒரு பேட்டி கொடுத்தேன். மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் அவங்க மேல எல்லாம் மணல் தவறு செய்ததாக சொன்னாங்க….  அது விஷயமாக என்கிட்ட  கூடுவாஞ்சேரியில் கேட்டாங்க….  நான் அவுங்க கிட்ட  சொன்னேன்….  அத நீங்க கேட்கிறீங்க… என தெரிவித்தார்.