தமிழகத்தில் சத்தியவாணி முத்து அம்மையார் திட்டத்தின் மூலம் அரசாங்கம் இலவச தையல் மிஷின் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. எனவே தகுதி உள்ள பெண்கள் இ சேவை மையம் மூலமாக இலவச ‌ தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 20 முதல் 40 வயது இருப்பதோடு தையல் தெரிந்திருப்பது அவசியம். அதன் பிறகு ஆண்டு வருமானம் 75 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.