மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நாலா சோப்ரா என்ற பகுதியில் நடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை அருகே உள்ள நாலாசோப்ரா என்ற இடத்தில் ப்ரீத்தி ஷூக்லா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் தனது கணவனை பிரிந்த நிலையில் ரமேஷ் பார்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ப்ரீத்தி ஷூக்லா தனது வளர்ப்பு தந்தையான ரமேஷ் பார்தி என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

அதோடு கடந்த இரண்டு வருடங்களாக ப்ரித்தியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ரமேஷ் மீண்டும் ப்ரீத்தியை பாலியல் உறவிற்கு கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ப்ரீத்தி அவரை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதற்கு உடன்பட்டு அவரின் பின்னால் சென்றுள்ளார். அப்போது அவரை கண்களை கட்டுமாறு கூறிய ப்ரீத்தி பின்னர் கத்தியால் தாக்கியுள்ளார்.

அதோடு அவரது ஆணுறுப்பையும் கத்தியால் வெட்டிய நிலையில் அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தெருவில் பயந்து ஓடினார். இருப்பினும் அந்த இளம் பெண் விடாது துரத்தி சென்று  தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது பலத்த காயமடைந்த ரமேஷ் மும்பையின் சதாப்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ப்ரீத்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.