மத்திய அரசு மாற்றான் தாய் கண்ணோட்டத்துடன் இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான்,

அதுலாம் எனக்கு இல்லை….  எனக்கு ஒரே தாய். நீ கொஞ்ச நாளைக்கு ஆடுவ.  நான் வந்தேன் என்றால் எனக்கு   ஒரே தாய்,  எனக்கு தமிழ் தாய்.   என் மக்கள்,  என் நிர்வாகம் அவ்வளவுதான். நீ வந்து இதே குஜராத்… பீகார்….   உத்தர பிரதேசத்திலையோ வெள்ளம், புயல்னா….  இப்படி வந்து கேவலமா பேசிட்டு உட்கார்ந்திருப்பீங்களா ? உடனே வருவீங்க…. உடனே பறந்து வருவீங்க…

அடுத்த நொடி 500 கோடி அறிவிக்கிறீங்க. அறிவிச்சிலா ?   இல்லையா ? நான் ஒரு ரூபா கொடுத்தா 40 காசு திரும்பிதாறீங்க.  அவன் 1 ரூபாய் கொடுக்குறான். மூன்று ரூபாய 80 காசு திரும்ப கொடுக்குறீங்க.  அப்போ உனக்கு இந்தியனா ஹிந்தி பேசணும். ஹிந்தி பேசுறவன் தான் இந்தியன். ஹிந்தி பேசுற மாநிலம் தான் இந்தியா.

அப்படின்னா என்னை எதுக்கு வச்சிருக்க ? வரிக்காக… என் நிலத்தின் வளத்திற்காக…. வேற எதுக்கு ? இந்த நிலத்தில் இருக்கக்கூடிய வளம் எல்லாம் போயிடுச்சு. மீத்தேன்,  ஈத்தேன் எல்லாம் எடுத்தாச்சு…. நிலக்கரி  எல்லாம் சுரண்டி முடிச்சாச்சு. நாடு சுடுகாடாயிடும், போட்டு போயிருவா…  நீ தனி நாடு கேளு,  வச்சுக்கன்னு போயிடுவான். ஏனென்றால்,  ஒன்னும் இல்ல என தெரிவித்தார்.