சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகரில் இருக்கும் பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது தரமான முறையில் உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தார். அப்போது கெட்டுப் போன மற்றும் அதிக கலர் பொடி கலந்து தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்த 15 கிலோ இனிப்பு வகைகளை பறிமுதல் செய்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள் இனிப்பு, காரம் தயாரிப்பதற்கு பயன்படுத்தும் எண்ணையை மீண்டும் வடிகட்டி பயன்படுத்தக்கூடாது. அதிக கலர் பொடியை இனிப்பு வகைகளில் சேர்க்கக்கூடாது என சரவண குமார் அறிவுறுத்தியுள்ளார்.