தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரவே தருகின்றனர். இங்கு வெளியூர் மட்டும் இன்றி வெளி மாநிலங்கள், வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் ஆர்வமுடன் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். தற்போது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் குற்றாலத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை சுற்றுலா பயணிகள் வாங்குவார்கள். அதில் தரம் இல்லாத உணவுப் பொருட்களை சிலர் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரி நாக சுப்பிரமணியன் குற்றாலம் அருவி கரை பகுதியில் இருக்கும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன வாழைப்பழ சிப்ஸ் 665 கிலோ, பேரீச்சம் பழம் 152 கிலோ, செயற்கை கலர் சேர்க்கப்பட்ட அல்வா 420 கிலோ, தடை செய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தார். இதுபோல மீண்டும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.