
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் வழக்கில் சென்னை மாதாவரத்தைச் சேர்ந்த பிரபல கெமிக்கல் நிறுவனத்தில் இருந்து தான் மெத்தனால் வினியோகம் செய்யப்பட்டுள்ளது விசாரணையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ஆலையின் உரிமையாளர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த கள்ளச்சாராயம் விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மெத்தனால் வழங்கியதாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் இதுவரை 58 பேர் பலியாகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.