
கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்தப் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 98 பெயரை காணவில்லை என்று கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதை உண்ட 128க்கும் மேற்பட்டோர் நீர்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 481 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் 400 குடும்பங்கள் சிக்கித் தவித்து வருகின்றன.