நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் கட்டண உயர்வை அறிவித்தன. இதனால் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கட்டிட உயர்வு தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையில் செல்போன் கட்டண உயர்வு விவகாரத்தில் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டு உள்ளதாக காங்கிரஸ் விமர்சித்திருந்தது.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் மொபைல் நிறுவனங்களின் சுதந்திரமான சந்தை முடிவுகளில் அரசு தலையிடாது என்றும் டிராய் விளக்கமளித்துள்ளது. மேலும் 5g சேவை காரணமாக நிறுவனங்கள் நாடு முழுவதும் அதிக அளவில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.