திமுக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழக மீனவர்களின் நலனை முன் வைக்கும் மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படை படகு மோதியதில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.