விஜயின் தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. தற்போது விஜய் தனது கட்சியின் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். நிர்வாக வசதிக்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து உத்தரவு பிறப்பித்தார். ஒவ்வொரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் கடந்த 24 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு தனது உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை விஜய் பரிசாக கொடுத்தார். இரண்டாவது கட்ட மாவட்ட செயலாளர்கள் கடந்த 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு கழக விதிகளின் அடிப்படையில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 57 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நியமித்துள்ளார்.