
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் பரப்பளவு 5,904 சதுர கிலோமீட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிய வாகன நிறுத்த கொள்கை தயாரிக்கப்பட்டது. சென்னையில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்திற்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளது. வாகன நிறுத்த இடங்களில் எத்தனை வாகனங்கள் உள்ளன? அங்கு ஏதாவது விதிமுறை நிகழ்கிறதா என்பதை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான தனியாக கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்.
பி ஓ.எஸ் மெஷின்கள் மூலம் வாகன நிறுத்தத்தை எடுத்து முன்பதிவு செய்து, வாகனங்களின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்யவும் முடியும். இதற்காக செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்படும். இந்த நிலையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டர் விரைவில் கூறப்பட உள்ளது. எனவே டெண்டர் போற விருப்பமுள்ள நிறுவனங்களுடன் வருகிற 14-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் ஆவணத்தை தயாரிப்பதற்கான பணியை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.