ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் இந்திய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை இந்தியாவின் பாதுகாப்பு படை அமைப்புகள் தகர்த்து எறிந்தது. நேற்று மாலை இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, எல்லையில் உள்ள ராணுவ நிலைகளுடன் மட்டும் நமது நடவடிக்கையை நிறுத்தி விடவில்லை. இந்திய படைகளின் முழக்கம் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகமான ராகுல் பிண்டி வரை சென்றுள்ளது.

அங்குள்ள பல ராணுவ இலக்குகளை தாக்கி வலுவான பதிலடி வழங்கியது. எனினும் பொது மக்களை இலக்காக வைத்து நாம் தாக்குதல்கள் நடத்தவில்லை என கூறியுள்ளார்.