முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறி தற்போது வீடு திரும்பினார். இன்று அதிகாலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாக்கிங் சென்றபோதும் பன்னீர்செல்வம் அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
அதற்கு முன்னதாகவே தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் இரு குடும்பத்தினரின் மேல் இருக்கும் பற்றின் அடிப்படையில் சந்தித்தோம். அரசியல் இல்லை.
முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தேன் என விளக்கம் அளித்துள்ளார். 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதால் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
