வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்போதிலிருந்து அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முதலமைச்சரின் முக ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியது அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இன்று அதிகாலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாக்கிங் சென்றபோது பன்னீர்செல்வம் அவரை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
ஏற்கனவே தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார். தற்போது பன்னீர் செல்வமும் முதலமைச்சரின் மு.க ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
