
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கடலூருக்கு சென்றார். இந்த நிலையில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக திருப்பெயர் கிராமத்தில் பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலி, அரசு பள்ளி புதிய கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார்.
மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என கூறி அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பேசினார். அவர் கூறும் போது, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இருக்கும் வரை எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. பயமும் இல்லை. எங்கள் கல்வி எங்கள் உரிமை எனக் கூறியுள்ளார்.