டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வருகிற 5-ம் தேதி நடைபெற உள்ளது. இன்று மாலை பிரச்சாரம் முடிவதால் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று பிரதமர் மோடி மரத்தடியில் அமர்ந்தவாறு மாணவர்களுடன் கலந்துரையாடி வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அரசியலை காட்டிலும் கல்வியே பிரதானமாக இருக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். மேலும் ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லியில் கல்வி நிலை குறித்தும் பிரதமர் கலந்துரையாடினார்.