ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதலவர் கூறியதாவது, 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இலக்கை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி, தொடங்கி வைத்துள்ளது. திமுகவின் வெற்றிப் பயணம் 2026 சட்டமன்ற தேர்தலிலும் அமைந்திடும். பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசியோருக்கு டெபாசிட் பறிபோகும் வகையில் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். தமிழகம் என்றென்றும் பெரியார் மண் என்பதை மீண்டும் மக்கள் நிரூபித்துள்ளனர்.

மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதைவிட மக்களுக்கு என் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அதனால் தான் நான் பரப்புரைக்கு செல்லாமலேயே திமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்து மற்ற அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்துள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.