இந்திய விமானப்படை மே 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் ராஜஸ்தானின் பாகிஸ்தான் எல்லை அருகே ஒரு முக்கியமான விமானப்பயிற்சியை நடத்தவுள்ளது. இந்த பயிற்சி இந்தியாவின் செயல்பாட்டு தயார்நிலை ஒத்திகையின் ஒரு பகுதியாகும். ரஃபேல், மிராஜ் 2000 மற்றும் சுகோய்-30 உள்ளிட்ட முன்னணி போர் விமானங்கள் இதில் பங்கேற்கின்றன. பாகிஸ்தானுடன் அதிகரித்து வரும் பதட்டங்களைத் தொடர்ந்து இந்த பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. NOTAM (Notice to Airmen) மூலம் இதற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

இந்த பயிற்சி மே 7 ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்குத் தொடங்கி, மே 8 ஆம் தேதி இரவு 9:30 மணி வரை நடைபெறும். இதற்காக பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வான்வெளி கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு, தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கை மற்றும் விமானப்படையின் ஒருங்கிணைப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வகை பயிற்சிகள் அவசியம் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.