பள்ளியில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அரங்கேறும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சிறைத்துறை டிஜிபி பரிந்துரையை ஏற்று, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பாலியல் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்க கூடாது என கூறப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி அனைத்து சிறை அதிகாரிகளுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பாலியல் குற்றவாளிகளை முன்கூட்டி விடுவிக்க பரிந்துரைக்க கூடாது என டிஜிபி திட்டவட்டமாக கூறியுள்ளார்.