
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவில் வருவதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அரசியல் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொண்டர்கள் மாற்று கட்சிகளில் சேர ஆரம்பித்து விட்டனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் பாமகவை சேர்ந்த 200 பேர் அதிமுகவில் இணைந்தனர். பாமக முன்னால் மாவட்ட செயலாளர் காசி. நெடுஞ்செழியன் தலைமையில் 200 பேர் அதிமுகவில் இணைந்தனர்.