அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை இல்லை. தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீட்டு சட்டப்படி விசாரணை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் என் வீட்டில் தொண்டர்கள் கூடுவது வழக்கமானது தான். ஆலோசனை ஏதும் நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.