
சென்னை அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மகாவிஷ்ணுவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய சுற்றரிக்கையை அனுப்பி உள்ளது. அதில் இனி பள்ளிக்குள் அனுமதி இன்றி வெளியாட்களை அனுமதிக்க கூடாது. அதன் பிறகு உரிய அனுமதி இன்றி கல்வி சாரா நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர்களை தவிர்த்து பிறர் பாடம் நடத்தக்கூடாது. மதிய உணவுக்காக ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது. மேலும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் செல்போனில் பேசக்கூடாது போன்ற பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.