தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலமாக கடந்த 14ஆம் தேதி அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பல குளறுபடிகள் நிலவுவதாக சர்ச்சை எழுந்தது. அதாவது அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு 15 மாவட்ட மையங்களில் 4186 வழக்கறிஞர்களுக்கு நடைபெற்றது. ஆனால் சில மாவட்டங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக சர்ச்சை வெளியானது.

இதன் காரணமாக தற்போது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் மொத்தம் 51 காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற நிலையில் கிட்டத்தட்ட நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த தேர்வுகளை எழுதி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.