
தமிழக அரசு சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தது. அப்போது கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் தற்போது கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதிய வீடுகளை கட்டுவதற்காக 3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.