சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், உணவகங்கள், தங்குமிடங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தொழில் உரிமங்கள் வழங்குவது தொடர்பாக புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டு தொகையின் அடிப்படையில் நகரங்களை ஒட்டி இருக்கும் ஊராட்சிகளில் 5000 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை உரிமை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

மற்ற ஊராட்சிகளில் 250 ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது கிராமப்புற சிறு வணிகர்களுக்கு உரிமம் கட்டாயம் என செய்தி வெளியானது. அந்த செய்தி தவறானது என்றும், கிராமப்புற பஞ்சாயத்து சிறு குறு கடைகளுக்கு உரிமம் பெற தேவையில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.