
பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்தனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
- வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு 10.5 சதவீதத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
- அனைத்து சமுதாயத்தினருக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக்கு ஏற்ப 2 சதவீதம் உயர்த்த வேண்டும்.
- மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.
- கிரீமிலேயர் முறையை உடனடியாக நீக்க வேண்டும்.
- அரசுத் துறையில் மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு உறுதி செய்ய வேண்டும்.
- உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பணிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக வேண்டும்.
- பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.