சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு (நவம்பர் 15) முதல் FASTag இல்லாத வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
FASTag இல்லாமல் ரொக்கமாகக் கட்டணம் செலுத்தும் வாகனங்கள், இனி FASTag உள்ள வாகனங்களை விட இரண்டு மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், FASTag இல்லாத வாகனங்கள் UPI மூலம் கட்டணம் செலுத்தினால் கூட, வழக்கமான கட்டணத்தைவிட 1.25 மடங்கு அதிகமாகவே வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணப் பரிவர்த்தனையைக் குறைத்து, டிஜிட்டல் முறையை ஊக்குவிக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் இந்த புதிய கட்டண விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
