தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ‌.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, என்னை மிகவும் வேதனைகுள்ளாக்கிய கள்ளக்குறிச்சி நிகழ்வு நடந்திருக்கக் கூடாத ஒன்று. இது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் நான் கண்காணித்து வருகிறேன். இனி இது போன்ற சம்பவங்கள் மீண்டும் தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருக்க ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளேன். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.