சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் நேற்று பணியில் இருந்த பாலாஜி என்ற டாக்டரை விக்னேஷ் என்ற வாலிபர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை கத்தியால் குத்தியதால் அவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அனைத்து அரசு மருத்துவமனையிலும் போலீஸ் பூத்துகள் அமைக்க சென்னை காவல்துறை முடிவெடுத்துள்ளது. சென்னையில் இருக்கும் 19 அரசு மருத்துவமனைகளில் 9 இடங்களில் ஏற்கனவே காவல் நிலையங்கள், பூத்துகள் உள்ளது. மீதமுள்ள 10 மருத்துவமனைகளிலும்  காவல் நிலைய பூத்துகள் அமைக்கப்படும் என மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.