
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெறுகிறது இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, ஒவ்வொரு மாணவரும் தமிழ்நாட்டின் சொத்து. கல்வித்துறையில் திராவிட மாடல் அரசு சாதனைகளை செய்து வருகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி கல்வித்துறையை இந்திய அளவில் இரண்டாவது இடத்திற்கு உயர்த்தியவர். அன்பில் மகேஷ் பதவியில் இருக்கும் காலம் பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம்.
பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் மீது இருக்கும் அக்கறை தமிழக அரசுக்கும் உள்ளது. இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுத்துகிறது. தேசிய கல்வி கொள்கை என்பது சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை. நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம். பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன். கையெழுத்திடும் அந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன். எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல. மொழியை திணிக்க நினைத்தால் எதிர்ப்போம். எங்கள் மொழியை அழிக்க ஆதிக்கம் செலுத்த நினைத்தால் விடமாட்டோம் என முதல்வர் கூறியுள்ளார்.