சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் ஞானசேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் திமுகவைச் சேர்ந்தவர் என எதிர்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறது. அதற்கு திமுக மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் சார் என்ற நபரை மாணவி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது யார் என்பது புதிராகவே இருக்கிறது.
இந்த நிலையில் அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால் எங்கள் தரப்பு வாதத்தையும் ஏற்க வேண்டும் என கோரி அதிமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் தமிழக அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
