பாஜக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம். இவருக்கு தற்போது கோவை மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு முருகானந்தத்திற்கு எதிராக அவருடைய மாமனார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் முருகானந்தம் நேரில் ஆஜராகவில்லை. மேலும் இதன் காரணமாக தற்போது நீதிமன்றம் அவருக்கு பிடிவார் என்று பிறப்பித்ததோடு நவம்பர் 27ஆம் தேதி அவரின் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.